தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில், கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகரான ஷிவ ராஜ்குமார் நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியான நிலையில், நேர்காணல் ஒன்றின் மூலம் அதனை அவர் உறுதிசெய்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட திரையுலக பிரபலமான ஷிவ ராஜ்குமார் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளதாக நேர்காணல் ஒன்றின் வாயிலாக, நடிகர் ஷிவ ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

image

இதுகுறித்து நேர்காணலில் பேசியபோது, “எனக்கு மிகவும் பிடித்தவர் தனுஷ். அவருடைய எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். தனுஷ் நிறைய விஷயங்களில் என்னை அப்படியே நினைவுப்படுத்துகிறார். உண்மையில் சொல்லப்போனால், அவர் என்னைப் போன்று உள்ளார். இல்லையெனில் நான் அவரைப் போன்று உள்ளேன். என்னில் அவரையும், அவரில் என்னையும் பார்க்கின்றேன். அவருடைய குறும்புத்தனம், அவர் தன் நண்பர்களுடன் நடந்துகொள்ளும் விதம் ஆகியவைகளில் நாங்கள் இருவரும் ஒரேமாதிரிதான் இருக்கின்றோம். இதனால் தனுஷை எப்போதும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். திரையில், அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

image

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பெங்களூரு வந்தபோது, என்னிடம் முழுப் படத்தின் கதையை 40 நிமிடத்தில் விவரித்துக் கூறினார். அது உண்மையில் எனக்கு திரைப்படத்தை காட்டியதுப் போன்று இருந்தது. ஏனென்றால் உணர்ச்சிகரத்துடன் விவரிக்கும்போது நம்மை மிகவும் வசீகரிக்கும். இந்தப் படம் திரைக்கு வரும்போது எனக்கும், தனுஷுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை பார்வையாளர்களால் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஷிவ ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘வஜ்ராகயா’ படத்தில், அவருக்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பீரியட் படமாக உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.