இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியை அடைந்து , பொருளாதார பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு, இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘நாம் வளர்ந்த நாடாக வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அதுக்குகான வேலைகள் எதுவும் நாம் செய்யாமல் இருக்கிறோம். இந்திய பொருளாதரம் வளரவில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். நாட்டின் பொருளாதாரம் மேம்பட கடவுளின் ஆசியும் நமக்கு வேண்டும். இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு 2 – 3% தான் இந்துகள் வாழ்கிறார்கள். அங்கு கூட நாணயத்தில் விநாயகர் படத்தை வைத்துள்ளனர். நாம் ஏன் வைக்கக்கூடாது?

image

இதையும் படியுங்கள் – கோவை வெடிவிபத்து வழக்கு விசாரணை யார் வசம் உள்ளது? மாநகர காவல் ஆணையர் பதில்!

வீட்டில் தீபாவளி பூஜையின் போது தான் இந்த யோசனை எனக்கு தோன்றியது. இப்போது இருக்கும் ரூபாய் நோட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். லட்சுமி, விநாயகர் படத்தை சேர்க்கலாம். இனிமேல் அச்சடிக்கும் புதிய நோட்டுகளில் இந்த இரண்டு கடவுளின் படத்தை சேர்த்தால் கடவுளின் ஆசி கிடைக்கும். பொருளாதாரம் வளர நல்ல திட்டங்களுடன் கடவுளின் ஆசியும் அவசியம். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுத இருக்கிறேன் ‘’ என கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.