பிளாக்‌ஷிப் நிறுவனமும், 25-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின் வெள்ளி விழா பரிசாக, ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விரைவில் பிளாக்‌ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் “லவ் யூ யுவன்” எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை பார்க்க மட்டுமே அழைக்கப்பட்ட யுவனுக்கு, அவருக்காக காத்திருக்கும் இந்த உலக சாதனை முயற்சியே சொல்லப்படவில்லை என்பது அவருக்கு கூடுதல் ஆச்சர்யம், மகிழ்ச்சியைத் தரவே, ஆடிப் பாடி அதிரடித்தார் யுவன் சங்கர் ராஜா.

இதன்படி ஒரே நேரத்தில் 11,000 மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிப் பாடி சாதனை படைத்தனர். இது இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களால், உலக சாதனையாக உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி அக்டோபர் 8-ம் தேதி, கோவை சரவணப்பட்டியில் எஸ்.என்.எஸ் நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதே நிகழ்வில் விரைவில் வெளிவரவிருக்கும் பிளாக் ஷிப் தொலைக்காட்சியின் லோகோ பிரம்மாண்டமாக யுவனால் அறிமுகப்படுத்தப்பட்டது.

image

பிளாக்‌ஷிப் டிவியின் விளம்பரங்களுக்கான பிராண்ட் அம்பாசிடராகிறார் வைகைப் புயல் வடிவேலு என்பதை தெரிவிக்கும் வகையில் டீசரும் வெளியிடப்பட்டது. இதுவே வடிவேலு அவர்கள் பிராண்ட் அம்பாசிடராக விளம்பரத்தில் களமிறங்கும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் கரு மற்றும் உருவாக்க வேலைகளை பிளாக்‌ஷிப் மேற்கொள்ள, வித்தியாசமான தனது ஈசி நடன அசைவுகள் மூலம் சினிமா நடன ஆசிரியர் அசார், இதை சாத்தியப்படுத்த, தங்களிடம் பயிலும் அத்தனை கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 11,000 மாணவர்களையும் ஒரு சேர தயார் செய்து ஆடவும் வைத்து அசத்தியது எஸ்.என்.எஸ் கல்வி குழுமம்.

மேலும் டிசம்பர் 25-ம் தேதி தூத்துக்குடி, டிசம்பர் 31-ம் தேதி கோயம்புத்தூர், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி திருச்சி ஆகிய ஊர்களில் யுவனின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டது பிளாக்‌ஷிப் டிவி.

image

நிகழ்வினை, பிளாக் ஷிப் நிர்வாகிகளும் நடிகர்களுமாகிய சுட்டி அரவிந்த் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ் தொகுத்து வழங்கினர். மேலும் நரேந்திரபிரசாத், அதிர்ச்சி அருண், அயாஸ், குட்டி மூஞ்சி விவேக், டி.ஜே.சாம் பிரபா என பிளாக்‌ஷிப்பின் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டு மாணவர்களை கலகலப்பாக்கினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.