மஹா திரைபடத்திற்காக மதுரை மேம்பாலத்தின் மீது 1000 அடி நீளத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்து சிம்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தனர்.

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள 50வது திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நாசர், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் சிலம்பரசன் டிஆர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

image

அதனை வரவேற்கும் விதமாக மதுரை குருவிக்காரன் சாலை மேம்பாலத்தின் மீது மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற ரசிகர்கள் சார்பில் 1000 அடி நீளத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்தனர்.

அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்ததால் காவல் துறையினர் கண்டித்ததை தொடர்ந்து பிளக்ஸ் வைத்த சிறிது நேரத்தில் அகற்றினர், இருப்பினும் ப்ளஸ்க் வைத்தபோது அதனை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்த காட்சியை தற்போது சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்நிலையில், அந்த காட்சி தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

image

மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அதனைக் கொண்டாடும் விதமாக ஆயிரம் அடி நீளத்திற்கு ப்ளக்ஸ் பேனர் அடித்துள்ளதாகவும் மஹா படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடையச் செய்வோம் என மதுரை சிம்பு ரசிகர்கள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.