விக்ரமுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை? – வெளியான தகவல்

விக்ரமின் ‘சியான் 61’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ‘வேட்டுவம்’ படத்தை பா. ராஞ்சித் இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், விக்ரமின் ‘சியான் 61’ படத்தையும் பா.ரஞ்சித் இயக்க உள்ளார். இதற்கான பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சென்னையில் சிறப்பாக நடைப்பெற்றது.

ஜி.வி.பிரகாஷ் இசைமையக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கேஜிஎஃப்-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம், படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் நடிகர் விஜயின் ‘வாரிசு’ படத்தில் தற்போது ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்திலும் நடித்து வரும் ராஷ்மிகா, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ படத்திலும் நடிக்க உள்ளார். இவரது நடிப்பில் ‘மிஷன் மஞ்சு’, ‘குட்பை’, ‘சீதா ராமம்’ உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. தென்னிந்திய படங்களையும் தாண்டி இந்தியிலும் கவனம் செலுத்தி வந்தாலும், பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டி வருவதாகவே கூறப்படுகிறது. இதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM