ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ’வீரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

’இது சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஆதி சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘வீரன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை ஏஆர்கே சரவணன் இயக்க முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆதிரா ராஜ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கியது. ஒரே கட்டமாக படத்தை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்புகிறது. படத்தில் நடிப்பதோடு இசையையும் ஹிப் ஹாப் ஆதி மேற்கொள்கிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவும் ஜிகே பிரசன்னா படத்தொகுப்பையும் செய்கிறார்கள்.

image

’வீரன்’ படத்தை Sathya Jyothi Films தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.