’பயணிகள் கவனிக்கவும்’ படத்தினை இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘பயணிகள் கவனிக்கவும்’ பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவனிக்க வைத்த ‘விக்ருதி’ படத்தின் ரீ-மேக்தான் இப்படம். விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்.பி சக்திவேல் இயக்கியுள்ளார். பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம்நாத் நாக் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பே படத்தின் தலைப்பாய் சூட்டப்பட்டிருக்கிறது.

image

லைக்ஸ், ஷேருக்காக சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், வாட்ஸப்பில் பகிரப்படும் செய்திகளை உண்மைத் தன்மை அறியாமல் பகிர்வதால் குடும்பங்கள் எப்படி பாதிக்கின்றன என்பதை அழுத்தமாக காட்டி கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர் எஸ்.பி சக்திவேல்.

இந்த நிலையில், படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில், “”பயணிகள் கவனிக்கவும்” திரைப்படத்தின் இயக்குநர் சக்திக்கும் அவர் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.