அமெரிக்காவில் 47 குழந்தைகளுக்கு தந்தையான இளைஞர், தன்னுடன் பெண்கள் யாரும் டேட்டிங் வருவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கைல் கார்டி என்ற இளைஞருக்கு 30 வயது ஆகிறது. ஆனால் அவர் தற்போது 47 குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார். இன்னும் 10 குழந்தைகளுக்கு தந்தையாக மாறவும் உள்ளார். இந்த குழந்தைகள் எல்லாம் அவர் விந்து தானம் செய்ததன் மூலம் பிறந்தவை ஆகும். விந்தணு தானம் செய்வதற்கான தனது விருப்பத்திற்கு வருத்தப்படவில்லை என்றாலும், அவரது முடிவு தனக்கு துணையை கண்டுபிடிப்பதை கடினமாக்கி உள்ளது என்று கைல் கார்டி கூறினார்.

Viral News: America man with nearly 50 kids says women don't want to date  him | Viral News: 30 ವರ್ಷದ ಯುವಕ 47 ಮಕ್ಕಳ ತಂದೆ, ಮದುವೆ ಆಗಲು ಒಪ್ಪದ  ಯುವತಿಯರು!Viral News in Kannada

அவருக்கு நீண்ட கால உறவுகள் யாரும் இல்லை. ஆனால் இப்போது அவரை நிறைய பெண்கள் அணுகுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டுமே! “இரண்டு வருடங்கள் விந்து நன்கொடை அளித்த பிறகு நான் அதிக கவனம் பெற்றேன், அப்போதுதான் நான் தீவிரமாக நன்கொடை அளித்தேன். எனக்கு ஒரு சில குழந்தைகள் பிறக்கத் துவங்கின. அதனால் என் இன்ஸ்டாகிராமில் பெண்களிடமிருந்து செய்திகளைப் பெற ஆரம்பித்தேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பல பெண்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

30ನೇ ವಯಸ್ಸಿಗೆ 47 ಮಕ್ಕಳ ತಂದೆ, ಇನ್ನೂ ಹತ್ತು ಮಕ್ಕಳ ನಿರೀಕ್ಷೆಯಲ್ಲಿದ್ದಾನೆ – ಆದ್ರೆ  ಸಿಗ್ತಿಲ್ಲ ಬಾಳ ಸಂಗಾತಿ! – Public TV

அவர்களில் பெரும்பாலோர் பணம் வைத்திருப்பதால், எந்த விந்தணு வங்கிக்கும் எளிதாகச் செல்ல முடியும். இருப்பினும், பெரும்பாலானவர்கள் குழந்தை தங்கள் உயிரியல் தந்தையைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள் என்னுடன் டேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. என் வாழ்க்கைத் தேர்வுகளை ஏற்றுக்கொண்டு அவருடன் ஒரு குடும்பத்தைத் தொடங்க “சிறந்த ஒருவர்” தேவை” என்று கைல் கார்டி கூறினார்.

கைல் தற்போது தனது குழந்தைகளை வெளிப்படையாக சந்திக்கிறார். அவர் “பல பெண்களுக்கு குடும்பங்களைத் தொடங்க உதவியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதைச் செய்வதன் மூலம் நான் பெறும் மகிழ்ச்சி. உலகின் சிறந்த உணர்வு. நான் தொடர்ந்து குழந்தைகளின் படங்களைப் பெறுகிறேன். அதனால் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் நல்லது” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.