விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர் யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டுப் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். மற்றொரு நாயகியாக சமந்தா நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட்’ மூவிஸ் வெளியிடும் இப்படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி நேற்று மாலை ட்ரெய்லர் வெளியானது.

image

இரண்டு காதலிகளிடம் சிக்கித்தவிக்கும் ஜாலி காதலனாய் கவனம் ஈர்த்திருந்தார் விஜய் சேதுபதி. குறிப்பாக, நயன்தாரா சமந்தாவின்‘என்னை கல்யாணம் பண்ணிட்டான்’ – ’என்னை பண்ணிட்டான்’ வசனங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி ட்ரெய்லர் பார்வைகளை அதிகமாக்கி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ‘குஷி’, ‘சத்யா’, ‘டைட்டானிக்’ என பல்வேறு படங்களின் காட்சிகளையே வித்தியாசமாக யோசித்து ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இதனால், ரசிகர்களிடம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லர் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 9 மில்லியன் பார்வைகளை நெருங்கிக்கொண்டிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தொடர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, ”இன்னும் கல்யாணம் ஆகாமல் சுற்றிக்கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று ட்ரெய்லரில் கருத்துகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.