சர்ச்சையில் சிக்கிய டெல்லி கேப்டன் ரி‌ஷப் பண்ட்க்கு நூறு சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது டெல்லி அணி வெற்றிபெற 6 பந்துகளுக்கு 36 ரன்கள், அதாவது 6 சிக்ஸர்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்ஸரை பொவேல் பறக்கவிட போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.

image

மெக்காய் வீசிய 3வது பந்து, பேட்ஸ்மேன் நெஞ்சு வரை வந்ததால், இதனை ‘நோ பால்’ என்று அறிவிக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் முறையிட்டார். ஆனால், அது ‘நோ பால்’ இல்லை என்று நடுவர் சொல்ல, கடுப்பான ரிஷப் பந்த் களத்தில் இருந்த பொவேல், குல்தீப் யாதவை உடனடியாக வெளியேறச் சொன்னார். பிறகு உதவிப் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவை மைதானத்துக்கு உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்து நடுவர்களிடம் விவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் ஆம்ரேவை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த பட்லர் இதுபற்றி ரிஷப் பந்திடம் காரசாரமாக விவாதம் செய்தார். இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பிரவீன் ஆம்ரே திரும்பியவுடன் ஆட்டம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது.

image

ரி‌ஷப் பண்ட் நடந்து கொண்ட விதத்திற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். அவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில், நேற்றைய போட்டியில், ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளை மீறியதாக டெல்லி கேப்டன் ரி‌ஷப் பண்ட்க்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ரி‌ஷப் பண்ட் தவறை  ஒப்புக்கொண்டுள்ளதாகவும், . ஐபிஎல் நடத்தை விதிமுறைகளில் லெவல்-2  தவறை செய்ததால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி அணியை சேர்ந்த ஷர்துல் தாக்கூருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்காக ஆம்ரே ஒரு போட்டியில் பங்கேற்பதற்கான  தடையையும் சந்திக்க நேரிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரிஷப் பண்ட் ஏற்படுத்திய சர்ச்சை… கெவின் பீட்டர்சன், அசாருதீன் கடும் விமர்சனம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.