இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துச் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடுகின்றன… மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ 500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. பேரிக்காய் கிலோ 1500-க்கு விற்கப்படுகிறது.

கோத்தபய ராஜபக்‌சே

இந்த நிலையில், இந்திய ஊடகமொன்றிற்கு இலங்கை வியாபாரிகள் அளித்த பேட்டியில், “இலங்கையில் ராஜபக்சே அரசு அனைத்தையும் சீனாவுக்கு விற்று வருகிறது. அவ்வளவு ஏன் நாட்டில் எதுவும் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடனாக எல்லாவற்றையும் வாங்கி உள்ளனர்.

தினமும் விலைவாசி அதிகரித்து வருகிறது அரசிடம் பணம் எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றது. அதுவே மிகப்பெரிய பிரச்னை. சீனாவிடம் அனைத்தையும் விற்றதால் இலங்கையிடம் பணம் இல்லை. மற்ற நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது. எங்களுக்கும் வியாபாரம் எதுவும் இல்லை. கோத்தபய ராஜபக்சே நல்ல தலைவர் கிடையாது. அவர் பதவி விலக வேண்டும்” என விரக்தியாகப் பேசியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.