அமெரிக்கவின் ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மியாமி நகரத்தில் இருந்து லண்டன் நோக்கி கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது. போயிங்க் 777- 300ER வகையைச் சேர்ந்த இந்த விமானம் சரியாக ஒன்றரை மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் மியாமிக்கே திரும்பியது. விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் 40 வயது பெண் பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து, இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதால் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திருப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம்

அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனும் விதி நடைமுறையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இடையூறு விளைவிக்கும் வகையில் பயணி என்ன செய்தார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.மியாமிக்கு திரும்பிய பிறகு அந்தப் பயணி, காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். யாருக்கும் இதனால் பாதிப்பில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டுள்ளார். திறம்பட செயலாற்றிய விமான பணியாளர்களைப் பாராட்டியதோடு பயணிகளின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது, அமெரிக்கன் ஏர்லைன்ஸ்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.