பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது எனத் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்த சில இடங்களில், சில நிறுவனங்கள் வழங்கிய பொருள்களில் குறைபாடு இருந்துள்ளது எனப் புகார்கள் வந்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பிலிருந்து இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு

அந்த தகவலின்படி, தரமற்ற பொருள்கள் வழங்கிய நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சமபந்தப்பட்ட நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும், இதுபோன்ற புகார்கள் எழ காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருள்களையே அரசு வழங்கிடும், அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான செயல்களை ஒரு போதும் இந்த அரசு அனுமதிக்காது என்றும் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 21-ல் 11 மேயர்கள் பெண்கள்… முதல்வர் `மூவ்’வின் பின்னணி என்ன?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.