சமந்தாவின் ‘யசோதா’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு

நடிகை சமந்தாவின் ‘யசோதா’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா ‘யசோதா’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பைத் துவங்கியது படக்குழு. சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

image

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 3 முதல் 12 வரையிலும், இறுதிகட்டப் படப்பிடிப்பு ஜனவரி 20 முதல் மார்ச் 31 வரையிலும் நடைபெறவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கிறது. கன்னடம், மலையாளம், இந்தியிலும் ஒரே நேரத்தில் டப் செய்தும் வெளியிடவுள்ளனர். தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ தெலுங்கில் ‘சகுந்தலம்’ படங்களிலும் நடித்துவரும் சமந்தா, அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப் படம், ‘தி ஃபேமிலி மேன்’ ராஜ்- டிகே இயக்கும் வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM