நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ டீசர் சண்டைக் காட்சிகளால் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘எனிமி’ வெளியாகி கவனம் ஈர்த்தது. அடுத்ததாக, ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைக்களத்தைக் கொண்ட ‘வீரமே வாகை சூடும்’ வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. ”மனிதர்கள் இரண்டே வகைதான். ஒருத்தர், வாழ்க்கையை அதன்போக்கில் வாழ நினைக்கின்ற சாமானியர்கள், இன்னொருத்தர், சாமானியர்களை பணம் புகழ் அதிகாரத்திற்காக அழிக்க நினைக்கும் சாத்தான்கள். அந்த சாத்தான்களின் வாழ்க்கையை மாற்றி எழுதும் சூழல் ஒருநாள், அந்த சாமானியன் கைகளிலேயே வரும்” என்ற வசங்களுடன் தொடங்கும் ஒன்றரை நிமிட டீசர் ‘அப்போ நீ சண்டையை நிறுத்தப்போறதில்லை?’ என்று கேட்க ‘அத என் எதிரிதான் முடிவு பண்ணனும்’ என்று விஷால் பேசும் வசனங்களுன் நிறைவு பெறுகிறது.

முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளுடன் டீசர் வெளியாகியிருப்பதால் விஷால் நடிப்பில் மீண்டும் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படம் என்பதை உணர்த்துகிறது. ஏற்கனவே, இப்படத்தின் சண்டைக் காட்சிகளின்போது விஷாலுக்கு விபத்து ஏற்பட்ட வீடியோக்களும் வெளியாகின. மேலும், சே குவேரா பின்னணியில் விஷால் நின்றிருக்கும் இப்படத்தின் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.