ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களில் 12  பேர் பலி – நீலகிரி ஆட்சியர் தகவல்!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், 13 உயிரிழந்து விட்டதாக சிறிது நேரத்துக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்திய விமானப்படை தரப்பிலோ, மத்திய அரசின் தரப்பிலோ உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது.

விபத்து

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் ஐ.ஏ.எஸ், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறார். விபத்தில் சிக்கிய 14 பேரில் 12 பேர் உயிரிழந்து விட்டதாகத் அவர் தெரிவித்திருக்கிறார்.

ராஜ்நாத் சிங்குடன் ராணுவத் தளபதி சந்திப்பு!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 14 பேரில், மீட்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மற்றவர்களின் நிலை குறித்த தகவல்கள் தெரியவில்லை. இந்த நிலையில், டெல்லியில் முப்படைத் தளபதியின் இல்லத்துக்குச் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத்தின் மகளைச் சந்தித்துப் பேசினார்.

மனோஜ் முகுந்த் நரவானே

அவரைத் தொடர்ந்து, ராணுவத் தளபதி நரவானேவும் டெல்லிக்கு விரைந்திருக்கிறார். பிபின் ராவத்தின் இல்லத்தில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

எரிந்தபடியே வெளியில் வந்தனர் – ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர் கூறும் தகவல்!

பிபின் ராவத் இல்லத்தில் ராஜ்நாத் சிங்; குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்!

நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நிகழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை தற்போது 9-ஆக அதிகரித்திருக்கிறது. முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி ஆகியோரின் நிலை குறித்த எந்தவிதத் தகவலும் இதுவரையில் வெளியாகாத நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத்தின் இல்லத்துக்குச் சென்று, அவர் மகளுடன் பேசினார்.

அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு!

நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விமானப் படைத் தளபதி சௌதாரிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு.

முடிந்தது மத்திய அமைச்சரவைக் கூட்டம்; 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு! 

பிபின் ராவத்

விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர்கள் விபத்து தொடர்பாக விளக்கமளிக்க உள்ளனர்.

அந்தச் சந்திப்பின்போது, முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி ஆகியோரின் நிலை குறித்து தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்து அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சுமார் 10 கிலோமீட்டர் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து

தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்.. முப்படைத் தளபதியின் நிலை? 

மீட்புப்பணிகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

கோவை விரைகிறார் முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின்

மீட்புப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார். விபத்து நடந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் சுமார் 15 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஹெலிகாப்டர் விபத்து; மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

முப்படைத் தளபதி, அவர் மனைவி உட்பட 14 ராணுவ உயரதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குளான சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்; மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை!

ராஜ்நாத் சிங்

இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், இந்த விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்துக்கொண்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் குன்னூருக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு!

விபத்து

முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், பலி எண்ணிக்கை தற்போது 7-ஆக உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்திருக்கிறது.

குன்னூர் அருகில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது! மீட்புப்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர் | நேரலை

முப்படைத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது!

கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ராணுவ உயரதிகாரிகளுடன் சென்று ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர், காட்டேரிபாதை அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குளானது. அதில், பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிய நிலையில் மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

பிபின் ராவத்
iaf tweet

இந்த நிலையில், அந்த ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது அதிக மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து

ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 விபத்தில் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹெலிகாப்டரில் பயணித்த மற்றவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய

கூடுதல் விவரங்கள் விரைவில்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.