தமிழ்நாட்டின் குன்னூரில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் கீழே விழுந்தவுடன் தீப்பற்றியதாக இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

image

இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் குறித்து தெரிந்துக் கொள்வோம். 

>விபத்தில் சிக்கிய இந்த Mi-17 V5 ஹெலிகாப்டர் ரஷ்யாவின் கசன் நிறுவனத்தின் தயாரிப்பாகும். 

>ராணுவ போக்குவரத்துக்கு பயன்படக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்க முடியும். 

>உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டது Mi-17 V5. 

>மோசமான வானிலையையும் சமாளித்து பறக்க கூடிய திறன் கொண்டது இந்த Mi-17 V5 ஹெலிகாப்டர். 

>மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஹெலிகாப்டர் பறக்கும். 13000 கிலோகிராம் எடையை சுமந்து கொண்டு பறக்கும் திறன் கொண்டது. 

>கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 80 Mi-17 ரக ஹெலிகாப்டரை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது. கடைசியாக கடந்த 2018-இல் ஒரு பேட்ச் வாங்கப்பட்டுள்ளது. 

>இந்திய நாட்டின் பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பயணிக்க இந்த ஹெலிகாப்டர்தான் பயன்படுத்தப்படுகிறது. 

>இந்த Mi-17 V5 ஹெலிகாப்டர் இந்தியாவில் இதற்கு முன்னதாக ஒரே ஒரு முறை விபத்தில் சிக்கி உள்ளது. அது கடந்த 2019-இல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுள்ளது. 

>சுமார் 60 நாடுகளில் இந்த Mi-17 V5 ஹெலிகாப்டர் பயன்பாட்டில் உள்ளது. 

>1981-இல் இந்த Mi-17 ரக ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

image

>ராணுவத்தினர் பயணம் செய்யவும், ரோந்து மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் இந்த ஹெலிகாப்டர் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 

>குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும்.

>இதை இயக்கும் பைலட்டால் இரவு நேரத்திலும் துல்லியமாகப் பாதையைப் பார்க்க முடியும்.

>ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச்சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும், கவச வாகனம் போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம்.

>எரிபொருள் டேங்கும் விபத்தில் வெடித்து சிதறி எரியாதபடி பாலியூரிதேன் பாதுகாப்பு கொண்டது.

>தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் கருவிகளும் உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.