பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஐம்பது நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை கமல் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட்டிங் பிக் பாஸ் செட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்று வந்த கமல் கோவிட் தொற்றுக்கு ஆளாக, கடந்த வாரம் மட்டும் வார இறுதி எபிசோடுகளை அவருக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் கமல்

தொடர்ந்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்த கமலின் உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து இந்த வார இறுதி எபிசோடுக்காக, இன்று (4/12/21) ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். வழக்கம்போல் இன்று காலை பிக் பாஸ் செட்டில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஷூட் தொடங்கியது.

பொதுவாக ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள்களின் எபிசோடுகளையும் சேர்த்து ஒரே நாளில் அதாவது சனிக்கிழமையே ஷூட் செய்து விடுவார்கள். குறிப்பாக எவிக்ஷன் தொடர்பான ஷூட்டிங்கும் சனிக்கிழமையே முடிந்துவிடும்.

ஆனால், இன்று (சனிக்கிழமை) ஒளிபரப்பாகிற எபிசோடின் ஷூட்டிங் முடியவே மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்துகொள்வதிலும் கமல் சிரமப்பட்டதாகச் சொல்கிறார்கள். கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் அவரது உடல்நிலை அதிகநேரம் ஷூட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லையாம். தற்போதுவரை வெளியான ப்ரோமாக்களிலும் கமல் வழக்கம்போல நின்றுகொண்டு நிகழ்ச்சியை நடத்தாமல், சோபாவில் உட்கார்ந்த வண்ணமே நடத்தியிருக்கிறார்.

பிக் பாஸ் கமல்

எனவே நாளைய எபிசோடுக்கான ஷூட்டிங்கை நாளையே வைத்துக் கொள்ளலாம் என கமல் தரப்பில் சொல்லப்பட, உடனடியாக பேக்கப் செய்துவிட்டார்கள். அங்கிருந்து கமலும் கிளம்பி போய்விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பதும் நாளைய ஷூட்டிங்கின் இறுதியில்தான் தெரிய வரும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.