சிம்புவின் ‘மாநாடு’ வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. சாட்டிலைட் உரிமத்தையும் ஸ்டார் விஜய் டி.வி.க்கும் ஒடிடி உரிமத்தையும் சோனி லைவ்விற்கும் விற்கபட்டுவிட்டது. இந்த வெற்றியை நேற்று கேக் வெட்டி சிம்பிளாக சிம்புவுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். “மகிழ்வோடு வெற்றியை பகிர்ந்து கொண்டோம்” என பூரிக்கிறார் சுரேஷ் காமாட்சி.

சுரேஷ் காமாட்சி, ‘மாநாடு’ தயாரிப்பாளர்

”திடீரென ‘மாநாடு’ வெளிவராதுன்னு சொன்னதும், சிம்புவின் ரசிகர்கள் பிரச்னைக்கு நான்தான் காரணம்ன்னு ட்விட்டெல்லாம் போட்டிருந்தாங்க. அதை நானும் பார்த்தேன். ஆனா, அவங்களுக்கு தமிழ் சினிமாவின் வியாபார விஷயங்கள் பத்தி முழுசா தெரியலைனு தான் நினைக்க வேண்டியிருக்கு. தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணிட்டோம். படம் ரிலீஸ் ஆகலைன்னு செய்தி வந்ததும் டக்னு ட்விட்டர்ல எதாவது தட்டிவிட்டுடுறாங்க. படத்தின் ரிலீஸை தள்ளி வைக்கறேன்னு நான் ட்விட்டர்ல போட்டுட்டேன். அதன்பிறகு, சூழலை சரி செய்துட்டு மறுபடியும் ரிலீஸ் குறித்து பதிவிடலாம்னு இருந்தேன். அதற்குள் டைரக்டர் ஒரு கருத்தை பதிவிட்டுட்டார். அதுதான் சிக்கலாகிடுச்சு. இதுவரைக்கும் நான் ஏழு படங்கள் பண்ணியிருக்கேன். அதுல எந்தப் படமும் ரிலீஸ் பண்ணாமல் நிறுத்தி வச்சதில்ல. ‘மாநாடு’ ஆரம்பிச்சதில் இருந்தே நெகட்டிவ் விஷயங்கள்தான் நிறைய வந்தது!

Also Read: மாநாடு பட வெற்றிக்கு இதுதான் காரணம் – ஒய்.ஜி.மகேந்திரன் ஓப்பன் டாக்

நானும் ஒரு கட்டம் வரை அதுக்கு ரியாக்ட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல அதுவும் பழகிடுச்சு. கடைசி நேரத்துல ரிலீஸ் பேச்சு வந்த போது கூட அவங்க பணம் கொடுத்தாங்க.. இவங்க பணம் கொடுத்தாங்கன்னு பேச்சு வந்துச்சு. அப்படி ஒண்ணுமே கிடையாது. பிரச்னை ரொம்ப சிம்பிள். சாட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் இருந்துச்சு. இவ்வளவு பெரிய படத்துக்கு ஏன் அந்த ரைட்ஸ் விற்காமல் இருந்துச்சுனு எனக்கும் ஆச்சர்யம். ரிலீஸுக்கு முதல் நாள்தான் ஒடிடிக்கு பேச்சாச்சு. எனக்கு லாபம் இல்லேனாலும் நான் ஃபைனான்ஸியற்கு என்ன கமிட் பண்ணியிருந்தேனோ… அதை செட்டில் பண்ணணும்ன்னு தெளிவா இருந்தேன். விடிய விடிய பிரச்னை போயிட்டிருந்துச்சு.

மாநாடு

கடைசி நேரத்துல ஃபைனான்ஸியருக்கு ஆறு கோடி நான் கொடுக்க வேண்டியிருந்துச்சு. அவர்கிட்ட நானே பேசினேன். அப்புறம் திருப்பூர் சுப்ரமணியம் சார் எனக்காக பேசினார். டி.ஆர். அண்ணன், எனக்காக அந்த ஆறு கோடிக்கு கையெழுத்திட்டார். அந்த தொகையை யாரும் கொடுக்கல. ஆனா, நான் கொடுப்பேன்னு அவங்க எனக்காக உறுதி கொடுத்தாங்க. கடைசி பத்து நிமிஷத்துல எடுத்த திடீர் முடிவினால் படத்தை ரிலீஸ் பண்ணிட்டேன். படம் ரிலீஸ் ஆன சில மணி நேரத்துல டி.ஆர். எனக்காக கொடுத்த உறுதிமொழி கடிதத்தை அவருக்கு திருப்பி கொடுத்துட்டேன். இந்த சினிமாவில் நேர்மையா இருக்கறதுனு சவால்னு புரிஞ்சுக்க முடிஞ்சது.”

முழு பேட்டி சினிமா விகடன் யூடியூப் சேனலில்..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.