பிக் பாஸ் தமிழ் 5-வது சீசன் முதல் பாதி விறுவிறுப்பாக முடிந்திருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5-ல் எவிக்ஷனில் சில விக்கெட்கள் வீழ்ந்தாலும் வைல்ட் கார்டு என்ட்ரி, அபிஷேக் ரிஎன்ட்ரி என இன்னும் 14 பேர் இருக்கின்றனர். 50 நாள்களைக் கடந்த நிலையிலும் இவர்தான் வெல்லப்போகிறார் என உறுதிப்பட ஒருவரை இன்னும் நம்மால் கைகாட்ட முடியவில்லை. வலுவான போட்டியாளர்கள் என நாம் நினைப்பவர்களும் ஒவ்வொருவராக எவிக்ஷனில் வெளியேறி வருகின்றனர்.

ஐக்கி பெர்ரி |

அப்படி இந்த வாரம் வெளியேறியிருப்பது யார் தெரியுமா?

நமீதா மாரிமுத்து, நடியா சாங், சின்னப் பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி என இதுவரை எவிக்ட் ஆனவர்கள் பட்டியலில் இந்த வாரம் இணைவது ஐக்கி பெர்ரி. மருத்துவர் மற்றும் ராப் இசைக்கலைஞராக பிக் பாஸுக்கு வந்த ஐக்கி பெர்ரி பிக் பாஸின் சுறுசுறுப்பான போட்டியாளர் எனக் கூறலாம். இந்த 54 நாள்களிலும் காலையில் பிக் பாஸ் ஒலிக்கும் பாடல்களுக்கு முதலில் எழுந்து செம ஆட்டம் போடுபவர் ஐக்கிதான். குடும்பத்திலிருந்து பிரிந்து தனிமையில் வாழும் ஐக்கி பிக் பாஸ் வீட்டில் அன்பை எதிர்பார்த்து அனைவரிடமும் பழகினார். இவருக்கு மிக நெருக்கமாகக் கடந்த சில வாரங்களாக நிரூப் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பல போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். நிரூப்புடன் ஏற்பட்ட நட்பினால் பிரியங்காவின் ஹிட்லிஸ்ட்டில் முக்கிய நபராக ஐக்கி இணைந்தார். பிக் பாஸுக்காக அவரது ஹேர்ஸ்டைலையே மொத்தமாக இந்த வாரம் மாற்றினார் ஐக்கி.

Iykki Berry |

எந்த வம்பும் வளர்க்காத போட்டியாளராக இதுவரை இருந்துவரும் ஐக்கி வெளியேறும் எபிசோடு இன்று ஷூட் செய்யப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் வெளியேற்றும் முதல் நபர் இவர்தான்.

ஐக்கி வெளியேறிய எபிசோடு நாளை 28/11/21 ஒளிபரப்பாக உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.