நம் நாட்டில் தற்போது வர்த்தகம் ஆகும் அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கிரிப்டோ கரன்ஸியில் பணம் போட்ட அனைவரும் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

Crypto Currency

Also Read: சரியும் பிட்காயின் மதிப்பு; முதலீட்டாளர்களை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறாரா எலான் மஸ்க்?

நம் நாட்டில் தற்போது பிட்காயின், எதிரியம், டோகோகாயின் எனப் பல வகையான கிரிப்டோ கரன்ஸிகள் வர்த்தகமாகின்றன. இந்த கிரிப்டோ கரன்ஸிகள் மீது இந்திய அரசுக்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை. இதனால் இந்த கரன்ஸிகள் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் செல்ல வாய்ப்புண்டு என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசினார். அவர் பேசியதைத் தொடர்ந்து, இந்த கிரிப்டோ கரன்ஸிகளைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்ட மசோதா வரும் குளிர் காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்தப் புதிய மசோதாவைக் கொண்டு வருவதன் மூலம் தற்போது வர்த்தகமாகி வரும் பிட்காயின், எதிரியம் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளுக்கும் தடை விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை, இந்த கரன்ஸிகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை எனில், வரி விதிப்பு மேற்கொள்ளப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மசோதா கடந்த ஆண்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்கிற பேச்சு நிலவியது. ஆனால், எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்கிற குழப்பத்தில் அரசு இருந்ததால், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.

பிட்காயின்

Also Read: Bitcoin வாங்கப் போறீங்களா? முதல்ல இதை கவனிங்க! | Nanayam Vikatan

கோவிட் -19 நோய் தொற்றுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியில் பணம் போடுகிறவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் சுமார் 1.5 கோடி பேர் இந்த கிரிப்டோ கரன்ஸியில் சுமார் 40,000 கோடி ரூபாய்க்குமேல் பணம் போட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.