நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியி வருவதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் ‘டாக்டர்’ வெளியாகவுள்ள நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

image

ஆனால், நெல்சன் திலீப் குமாரின் ‘கோலமாவு கோகிலா’ படத்தையே டிரெய்லர் நினைவூட்டுகிறது. அதில் கொக்கைனை கடத்துகிறார்கள், இதில், பெண்களைக் கடத்துகிறார்கள். மகள் நயன்தாராவுடன் இணைந்து எப்படி சரண்யா பொன்வண்ணன் அப்பாவியாய் நடித்து குடும்பமாக கொக்கைன் கடத்துகிறார்களோ… அதேபோன்று ’டாக்டர்’ படத்தில் குடும்பமாய் நடித்து சிறுமிகளைக் கடத்துகிறார்கள். பெண் குழந்தைகளைக் கடத்தும் வில்லனாக நடிப்பில் மிரட்டுகிறார் வினய். “நீ அந்த அம்மாவோட புருஷன் இல்லை. இந்தம்மா அந்த அந்தம்மாவோட அண்ணி இல்லை. ஆகமொத்தம் நீங்க ஒரு குடும்பமே இல்ல. ஒரு குடும்பமா நடிச்சி குழந்தைகளை கிட்னாப் பண்ணிட்டிருக்கீங்க” போன்ற வசனங்கள் நெல்சன் டச்.

”உங்ககிட்ட இருந்து எடுத்த கிட்னியை திரும்ப உள்ளேயே வச்சிடுவேன்” என்று சிவகார்த்திகேயன் சொல்ல ‘என்னது கிட்னி ஹாஸ்பிட்டலா?’…‘லூசு டாக்டர்… லூசுடாக்டர்’ என்று யோகி பாபுவும் சிவகார்த்திகேயனும் பேசும் வசனங்கள் சிரிப்பை வரவைத்து கவனம் ஈர்க்கின்றன. அதேபோல், மேக்கிங்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. நெல்சனின் ‘டாக்டர்’ நோயாளிகளை காப்பாற்றும் ‘டாக்டர்’ அல்ல. சமூக விரோதிகளிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றும் ’டாக்டர்’என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.