ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கு உதாரணமாக நீட் தேர்வும், உயிர் பலியும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க தவறிவிட்டது” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

நீட் தேர்வு மரணங்கள்

Also Read: நீட் இரண்டாம் கட்ட விண்ணப்பம்… பதிவும், மதிப்பெண் கணக்கீடும்!

இந்நிலையில், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் நம்பிக்கை இல்லாததால், கோவை மாவட்டத்தில் ஓர் மாணவர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கெந்தரை கிராமத்தை சேர்ந்தவர் மாதன். இவர் கெந்தரை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அம்பிகாவதி. இவர்களின் மகன் விக்னேஷ் (19). நீட் தேர்வுக்கு தயாராவதற்காகவே அம்பிகாவதி, விக்னேஷ் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

கோவை

12-ம் வகுப்பு முடித்துள்ள விக்னேஷ் ஏற்கெனவே, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், தேர்ச்சி பெற முடியவில்லை. நீட் தேர்வுக்கு தயாராகும் விதமாக பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார் விக்னேஷ்,

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வையும் விக்னேஷ் எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் இருந்து விக்னேஷ் திடீரென்று மாயமாகியுள்ளார். அம்பிகாவதி, விக்னேஷை பல இடங்களில் தேடியுள்ளார். விக்னேஷ் கிடைக்கவில்லை. அவரின் படுக்கையறையில் விக்னேஷ் தனது டைரியில் பெற்றோருக்கு ஓர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

விக்னேஷ்

அதில், “அப்பா அம்மாவுக்கு.. நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலாது. இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான். உண்மையை கூற எனக்கு பயமாக இருக்கிறது.

இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ.. உங்களை அப்பா அம்மா என்று அழைப்பதற்கோ எனக்கு தகுதி இல்லை. சரியா..? தவறா..? என்று தெரியவில்லை. ஆனால் வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னை தேட வேண்டாம். இன்னும் சில ஆண்டுகளில் திரும்பி வருவேன். வெற்றி பெற்றவனாக.. இது சத்தியம்..” என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார்.

நீட் தேர்வு

இதுகுறித்து அம்பிகாவதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை தேடி வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.