கொரோனா பரவல் காரணமாக ஆஸ்கர் விருது விழா இந்த ஆண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், ஆஸ்கர் விருது விழா நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பிப்ரவரி 28-ம் தேதியில் இருந்து ஏப்ரல்-25 க்கு விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பிப்ரவரி 28-ம் தேதி வரை வெளியான படங்கள் போட்டியில் பங்கேற்கவும் விதியில் மாற்றம் செய்யப்பட்டது.

image

அதோடு, இதுவரை வெளிநாட்டு படங்கள் பிரிவு தவிர்த்து மற்ற அனைத்து பிரிவுகளிலும் ஹாலிவுட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியான பிறமொழி படங்களை மட்டுமே பரிந்துரைக்கு அனுப்ப முடியும். ஆனால், கொரோனா காரணமாக, நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியான படங்களை பரிந்துரைக்கு அனுப்பும் வகையில் ஆஸ்கர் கமிட்டி ஏற்பாடு செய்தது. அதன் காரணமாகவே, சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதோடு, பரிந்துரைக்கு தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்ட 366 திரைப்படங்களில் பட்டியலிலும் அந்தப் படம் இடம்பெற்றது.

image

வழக்கமாக Dolby Theatre-ல் மட்டுமே நடைபெறும் ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு அதோடு Los Angelas Union Station அரங்கிலும் நடைபெற உள்ளது. அதோடு, பரிந்துரை செய்யப்பட்ட கலைஞர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிலும் விருது விழா நிகழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டைப் போலவே தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறும் ஆஸ்கர் விழாவில், விருது வழங்குபவர்கள் மட்டுமே மேடைக்கு வருவார்கள். மற்றபடி, பரிந்துரை செய்யப்பட்ட கலைஞர்கள் அனைவரும், ரிமோட் லொகேஷன்கள் எனப்படும் தனித்தனி இடங்களில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்தமுறை விருது விழாவில் பங்கேற்க உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.