நடிகர் தனுஷ் அவரது தாயாரின் பிறந்த நாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாயார் குறித்து தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ எனது தெய்வமான அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் அளவில்லா அன்பாலும், பிரார்த்தனையாலும் நான் இதுவரை வந்துள்ளேன். எனது தெய்வம் நீண்ட காலம் வாழ வேண்டும். குடும்பத்திற்காக நீங்கள் சகித்துக்கொண்டதற்கு ஈடாக, எங்களால் எதுவும் செய்ய இயலாது. நான் என்னை ஒரு நல்ல மகனாக மாற்றிக்கொள்ளவும், உங்களை பெருமைபடுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Dhanush (@dhanushkraja)


முன்னதாக, இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தனுஷின் நடிப்பு பிரபலங்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.