சந்தனக் கடத்தல் வீரப்பன் இளைய மகள் விஜயலட்சுமி நடிக்கும் ’மாவீரன் பிள்ளை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன். வீரப்பனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வித்யாராணி. இளைய மகள் விஜயலட்சுமி. மூத்த மகள் வித்யாராணி கடந்த ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார்.

image

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றி வரும் இரண்டாவது மகள் விஜயலட்சுமி தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்துவரும் “மாவீரன் பிள்ளை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

image

போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் விஜயலட்சுமி நிற்கிறார். இப்படத்தை,கேஎனார் ராஜா தயாரித்து இயக்குகிறார். ஏற்கனவே, வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘வனயுத்தம்’ என்ற படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.