ராஜமெளலி இயக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானின் பிறந்தநாளையொட்டி மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

’பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கெனவே, ராஜமெளலி மூன்று படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றியுள்ளார். ராம் சரணுடன் ’மஹதீரா’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிடோர் நடித்து வருகிறார்கள்.

image

ஏற்கனவே, இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘பீம்’ கதாப்பாத்திரத்தின் டீசரையும், ராம் சரண் நடிக்கும் ‘ராமராஜு’ கதாப்பாத்திரத்தின் டீசரையும், ஆலியா பட்டின் ‘சீதா’ கதாபாத்திரத்தின் போஸ்டரும் வெளியான நிலையில், இன்று அஜய் தேவ்கானின் 52-வது மோஷன் போஸ்டர் டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ஆனால், அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடவில்லை. டீசரில் துப்பாக்கிக்கள் சூழ நடுவில் ஆக்ரோஷமாய் வெளிப்படும் அஜய் தேவ்கான் உடையும் மிரட்டல் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.