திரைப்படக் கலைஞர் சன்னி லியோனி நேரடியாக மலையாளத்தில் நடிக்கும் ‘ஷீரோ’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இது, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

சன்னி லியோனிக்கு கேரளத்தில் இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொச்சி வந்திருந்தபோது அவருக்காக கூடியதே கூட்டம், அந்தக் கூட்டம் இதுவரை அங்கு எந்த அரசியல் கட்சிக்கும், எந்த மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கும் கூடியிருக்குமா என்றால் சந்தேகம்தான். அந்த அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். இத்தனைக்கும் சன்னி லியோனி அன்று கொச்சிக்கு வந்தது, நகைக்கடை திறப்பு விழாவிற்குதான்.

அதன்பின் ஒவ்வொரு முறையும் சன்னி லியோனி கேரளா வரும்போதெல்லாம் இதுபோன்ற காட்சிகளை பார்க்கலாம். அதேபோல் நிறைய மேடைகளில் கேரளா பற்றி பெருமையாக பேசுவது, கேரள உடையில் போட்டோ ஷூட் எடுப்பது என சன்னியும் கேரளா குறித்த டச்சில் இருப்பார். அவருக்கு இருக்கும் மவுசை உணர்ந்து அவ்வப்போது சினிமாவில் அவரின் பெயரை உச்சரிப்பது, அவரை நடிக்க வைப்பது என மலையாள சினிமா நட்சத்திரங்களும் சன்னி லியோனியைப் பயன்படுத்தின. கடந்த ஆண்டு வெளியான மம்மூட்டியின் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் சன்னி.

இதோ இப்போது ஒரு படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சன்னி லியோன். ‘ஷீரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை ‘குட்டநாதன் மர்பப்பா’ படம் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீஜித் விஜயன் என்பவர் இயக்குகிறார். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ரிலீசாகிறது. சைக்காலஜி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

இதை தனது சமூக வலைதள பக்கங்களில் சன்னி பகிர்ந்து வருகிறார். மோஷன் போஸ்டரில் காயமடைந்த ஒரு பெண்ணையும், படிக்கட்டில் அமர்ந்திருக்கும் குழந்தையின் காட்சிகளையும் காண முடிகிறது. தொலைக்காட்சி சேனலான எம்டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஸ்பிளிட்ஸ்வில்லா’ என்ற ரியாலிட்டி ஷோவுக்காக சன்னி லியோன் தற்போது ரன்விஜய் சிங்காவுடன் கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.