மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’படத்தின் டீசர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், நடிகை கெளரி கிஷன், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

image

அடுத்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படத்தில் இருந்து ஏற்கெனவே மேக்கிங் காட்சிகள், ‘கண்டா வரச் சொல்லுங்க’‘பண்டாரத்தி புராணம்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில் நேற்று ‘கர்ணன்’ படத்தில் இருந்து டீஸர் வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற டீஸர் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்ல் முதலிடம் பிடித்துள்ளது. 

image

பரியேறும் பெருமாள் படத்தில், அந்தப்படத்தின் கதாநாயகன் இறுதிவரை பொறுமையை கைக்கொண்டு அநீதிக்கு எதிரான போராட்டத்தை நடத்துவார். ஆனால் கர்ணனில், கதாநாயகன் அநீதிக்கான எதிரான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது போன்று காட்சிகள் டீஸரில் இடம்பெற்றுள்ளன. ஆகையால் படத்திலும் அது பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது. தற்போது வரை டீஸரை 35 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் டீஸருக்கு லைக் செய்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டீஸர் பிடிக்கவில்லை என காட்டும்விதமாக டிஸ்லைக் செய்துள்ளனர். 

image

மாரி செல்வராஜின் வித்தியாசமான திரைக்கதையும், சந்தோஷ் நாரயணனின் இசையும் டீஸரில் ரசிகர்களை கவர்ந்தது போலவே, திரையிலும் கவரும் என எதிர்பார்க்கலாம்.

<iframe width=”992″ height=”558″ src=”https://www.youtube.com/embed/pgfUzQ8nzBY” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.