தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கியுள்ளனர்.

image

நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் “விஜய் மக்கள் இயக்கம்” மூலமாக அவரது ரசிகர்கள் பலநலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் அங்கு புத்தாடை வாங்க முடியாமல் அவதியுற்ற செருப்பு தொழிலாளி பற்றிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்டவற்றை விஜய் ரசிகர்கள்  வழங்கினர்.

இது மட்டுமல்லாது அப்பகுதியில் சுற்றிவரும் யாசகர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கும் அவர்கள் புத்தாடைகளை வழங்கினர்.சமீபகால விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான சுவரொட்டிகளை அவரின் ரசிகர்கள் பல இடங்களில் ஒட்டிய நிலையில் விஜய் ரசிகர்களின் இந்தச் செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.