தெலங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை!

பல வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதைத் தொடந்து தற்போது தெலங்கானாவிலும் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா, சிக்கிம், சட்டிஸ்கர், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவிலும் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தெலங்கானாவில் பட்டாசை தடை செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காற்று மாசைத் தவிர்க்க பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் வாயிலாகவும் தெலங்கானா அரசு பரப்புரை மேற்கொண்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM