ஓ.டி.டி. மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க சட்டம் தனியாக இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 ஓ.டி.டி. மற்றும் தொலைக்காட்சியில் நேரடையாக திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க சட்டம் தனியாக இல்லை என்றும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு தமிழ் சினிமா முன்னேற்றம் பெற்றுள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வெள்ளாங்கோட்டை, இலுப்பையூரணி பகுதியில் புதிய கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

image

 இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்

“ஓ.டி.டி. மற்றும் தொலைக்காட்சியில் நேரடையாக திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க சட்டம் தனியாக இல்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வேறு வழியில்லை என்பதால் ஓ.டி.டியில் படங்கள் வெளியிட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், சூர்யா நடித்த சூரரைப்போற்று படங்களை வெளியிடுவது தொடர்பாக ஜோதிகா, சூர்யா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். மேலும், திரையரங்குகள் திறக்கும் வரை இடைக்கால ஏற்படாக ஓ.டி.டியில் படங்கள் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.அந்த கருத்து உண்மையாக இருந்தால் வரவேற்கக் கூடியதுதான்.

இது இடைக்கால ஏற்படாக இருக்கலாம். அதே போன்றுதான் ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் தொலைக்காட்சியில் நேரிடையாக வெளியாகும். திரைத்துறையினருக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 10 கோடிரூபாய் வழங்கி, குடியரசு தலைவரை வரவழைத்து நடத்தினார். அதேபோல, சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்ட 25 லட்சத்தினை 50 லட்சமாக உயர்த்தி வழங்கினார். அதனை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.75லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

image

 கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் 10 லட்ச ரூபாய் வழங்கினார். அதில் நானும் கலந்து கொண்டேன். மேலும் அந்த விழாவில் தமிழ் திரைப்படங்கள் கலந்து கொள்ளவதற்கு ஏற்பாடு செய்தோம்.இதன் பயனாகதான் நடிகர் பார்த்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படங்கள் தேசிய விருது பெற்றிருக்கிறது. இது தமிழ் சினிமா அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்பதையேக் காட்டுகிறது.

image

சர்வதேச அளவிலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் வகையில் தரமான திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வழங்கபட்டு வந்த அரசு மானிய தொகை 3 லட்சத்தில் இருந்து மறைந்துமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 லட்சமாக உயர்த்தினர். இதனை முதல்வர் எடப்பாடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 7 லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார். 2015-2016 வரை தயாரித்த 149 படங்களுக்கு  7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு தமிழ் சினிமா முன்னேற்றம் பெற்றுள்ளது. எதிர்காலத்திலும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை  செய்யும்” என்றார்.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.