இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை 800 எனும் பெயரில் திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே பலரும் தெரிவித்து வருகின்றனர். படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கை கொடியை கொண்ட சீருடையை அணிந்து இருப்பதை குறிப்பிட்டு விஜய் சேதுபதியை விமர்சித்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என திரையுலகைச் சேர்ந்த பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

image

அதேவேளையில் இது குறித்து தர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரன் வேடத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800‌’ என்ற திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தனக்கு வந்த வாய்ப்பை தான் நிராகரித்துவிட்டதாக நடிகர் டிஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

image

அசுரன் படம் மூலம் நடிகராக திரையுலகில் கால்பதித்தவர் டிஜே அருணாச்சலம். இவர் 800 திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசியுள்ளார். அதில், ”நான் இந்தியாவில் இருந்தபோது 800 படக்குழு என்னை அணுகினர். என்னை முரளிதரனின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென தெரிவித்தனர். கதைக்களம் குறித்து கூறினர். இலங்கை – தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகப்படவில்லை. என் அம்மா ஒரு ஈழத்தமிழர்.

போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை. அதனால் முடியாது” எனத் தெரிவித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்

Courtesy: https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/exclusive-teejay-said-no-to-vijay-sethupathis-muralidaran-biopic-because-of-its-politics/articleshow/78677869.cms

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.