முடிகாணிக்கை செலுத்த குவியும் பக்தர்கள்: பழனி கோயிலில் காணாமல்போன சமூக இடைவெளி

பழனி முருகன் கோயில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் முடி காணிக்கை செலுத்துவதற்காக தனிமனித இடைவெளி இன்றி பக்தர்கள் நிற்பதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தளர்வுகளைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தருகின்றனர். பழனி வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த ஏதுவாக கோவில் நிர்வாகம் சார்பில் சரவணப்பொய்கை மற்றும்‌ கிரிவீதியில் ஒருங்கிணைந்த முடிக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்படுகிறது.

image

பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதால் கோயில் நிர்வாகம் மொட்டை அடிக்கும் இடத்திற்கு வெளியே பக்தர்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணப்பொய்கை அருகே செயல்பட்டுவரும் தனியார் மண்டபத்தை சேர்ந்தவர்கள் வரிசையில் நிற்கும் பக்தர்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மொட்டை அடித்து பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

“பள்ளி திறப்பு விவகாரத்தில் முதல்வர் முடிவெடுப்பார்”- அமைச்சர் செங்கோட்டையன் !

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM