’’பர்ஃபெக்ட் என்ற வார்த்தைக்கு வரையறை நீதான்’’ -மகளுடன் புகைப்படம் வெளியிட்ட அக்‌ஷய்குமார்

மிஷன் மங்கள் படத்தின் வெற்றியை அடுத்து, அக்‌ஷய்குமாரின் ’பெல் பாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. எட்டு மணிநேரம் மட்டுமே வேலைசெய்யும் தனது கொள்கையை விடுத்து, இரண்டு மடங்கு நேரத்தை படப்பிடிப்புக்கு தற்போது செலவிட்டு வருகிறார் அக்‌ஷய்.

இதனால் தனது குடும்பத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இன்று மகள்கள் தினத்தை முன்னிட்டு தனது எட்டு வயது மகள் நிதாராவுடனான அழகிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தனது செல்ல நாய்க்குட்டியை பிடித்துக்கொண்டிருக்கும் மகளை அவர் கொஞ்சும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

image

அதில், ’’பர்ஃபெக்ட் என்ற வார்த்தைக்கு வரையறை நீதான். நிலவுக்கு சென்றுவிட்டு திரும்பியதைவிட அதிகமாக உன்னை நேசிக்கிறேன். என்னுடைய செல்லமகளுக்கு மகள்கள் தின வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

image

இதுதவிர, கடந்த வெள்ளிக்கிழமை நிதாராவின் 8வது பிறந்தநாளை முன்னிட்டு, இருவரும் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ’’அனைவரும் 2020இன் சோகப் பக்கத்தை பார்க்கும்போது, எனது குழந்தைகளுடன் செலவிட நல்ல தருணம் கிடைத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஹேப்பி பர்த்டே எனது இளவரசியே, எனது மகிழ்ச்சியே… எனது குழந்தையை நேசிக்க பல வழிகளைத் தேடுகிறேன்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM