ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாமல் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் கரங்களால் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியின் விபரீத முடிவால், குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்கு சுபிஷா என்ற மகள் இருந்தார். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மதுரையில் பயின்று வந்த சுபிக்ஷா படிப்பில் படுசுட்டி. பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என இவரது தனித்திறமைக்கு சான்றாக வீட்டை அலங்கரிக்கின்றன கேடயங்‌களும், சான்றிதழ்களும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு வென்ற சுபிக்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களால் பரிசு பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.

image

இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பயின்று வந்த சுபிக்ஷா, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆன்லைன் வாயிலான பாடங்கள் புரியவில்லை என்றும், பத்தாம் வகுப்பில்‌ பொதுத்தேர்வு என்பதால், அதிக மதிப்பெண்களை பெற முடியாது என்றும் குடும்பத்தினரிடம் கவலையை வெளிப்படுத்தியதாக சொல்லப் படுகிறது. கவலையிலும் அச்சத்திலும் இருந்த சுபிக்ஷாவை பெற்றோர் சமாதானப்படுத்தி, உற்சாகப்படுத்தியுள்ளனர்.

image

ஆனாலும், ஒரு அதிர்ச்சிகரமான முடிவை அந்த மாணவி எடுத்திருந்திருக்கிறார். அதாவது சுபிக்ஷாவின் உடலை, தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டுள்ளனர் குடும்பத்தினர். சுபிக்ஷாவின் தற்கொலை குறித்து திருப்புவனம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வியில் சிறந்து மாலை மரியாதையுடன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர், சுபிக்ஷாவின் உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுதனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.