இந்திய சினிமாவின் ஃபிட்டான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. 

image

கொரோனா ஊரடங்கு சமயத்திலிருந்தே ரசிகர்களோடு சமூக வலைத்தளங்கள் மூலமாக இணைந்து ஆக்டிவாக இயங்கி வருகிறார். போட்டோ, வீடியோ என பகிர்ந்து அமர்க்களப்படுத்தும் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் சமயங்களில் பதில் கொடுத்து வருகிறார். 

அந்த வகையில் #AskSam என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் நேற்று ரசிகர்கள் சமந்தாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதில் கொடுத்துள்ளார். 

‘எல்லா நேரமும் நீங்கள் ஃபிட்டாக இருக்க கடைபிடிக்கும் உணவு பழக்கம் என்ன?’என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு “அசைவ உணவுகளையும், பால் பொருட்களையும் நான் சாப்பிடுவதில்லை. அதிகளவில் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வேன். பச்சரிசி சாதம் என்றால் எனக்கு கொள்ளை இஷ்டம்” என சொல்லியுள்ளார் சமந்தா.     

ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மன அழுத்தங்களை சமாளிக்க தியான பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். 

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவோடு நடித்து வருகிறார் சமந்தா.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.