‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனவாதம் பற்றிப் பேசியிருக்கிறார். “எனக்கு 14 வயதாக இருந்தபோது எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம், அவரது தாயார் அவரை ஒருபோதும் தேநீர் குடிக்க விடமாட்டார், ஏனென்றால் தேநீர் குடிப்பதால் தோலின் நிறம் கருமையாகும் என்ற வித்தியாசமான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. மேலும் அவர் ஒரு முறை தேநீர் கேட்டபோது அவரது தாய் அவரிடம் நீ தேநீர் அருந்தினால், அவளைப் போல கறுப்பாகிவிடுவாய்’ என்று கூறியிருக்கிறார். அவர் ஒரு மகாராஷ்டிர பையன், நான் மாநிறம் கொண்ட மலையாளப் பெண். இது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது, ஏனென்றால் யாரோ ஒருவர் எனது தோல் நிறத்தைப் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டது இதுவே முதல் முறை. நமது சொந்த சமுதாயத்தில் இவ்வளவு இனவாதம் உள்ளது. உலகளாவிய இனவெறி பற்றி நாம் பேசும்போது, ​​நம்மைச் சுற்றிலும், நம் வீடுகளிலும், நம் நண்பர் வட்டங்களிலும், நமது சமுதாயத்திலும் என்ன நடக்கிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் வெளிப்படையான மற்றும் நுட்பமான இனவெறி மற்றும் நிறவாதத்தை முறியடிப்பதில் நமது பங்கைச் செய்ய வேண்டும். அன்றாட வாழ்க்கையில் நம்மை அழகாக மாற்றுவது கனிவான குணம் மட்டும்தான். சருமத்தின் நிறம் அல்ல” என்று பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

When I was 14 yrs old, one of my closest friends at that point told me that his mother never let him drink tea because she had this weird belief that drinking tea darkened ones’ skin complexion, and when he asked for tea once she told him(referring to me) “If you drink tea, you will become dark like her”. He was a fair maharashtrian boy and I was a wheat-ish skinned malayalee girl. The complexion dissimilarity we had had never even occurred to me up until that point. This left me perplexed because it was the first time somebody had made a comment like that with a mean undertone about my skin colour. So much casual racism and colourism exists in our own society. Calling a dark skinned person ‘kala’ is something we see on an everyday basis. The discriminatory behaviour against south-Indians and North-East Indians is also appalling. Dark skinned Indians are jokingly referred to as ‘madrasis’ because for some strange reason these ignorant people think all South Indians are only dark skinned. North-East Indians are almost exclusively only called ‘chinki’, all black people are casually referred to as ‘negros’ and fair people are equated as beautiful and dark skinned people are equated as ugly. While we speak about global racism, we must also become aware about what’s happening around us, in our homes, our friend circles and our society, and do our part in thwarting the obvious as well as the subtle racism and colourism that exists all around us, in our everyday lives. What makes you beautiful is being a good and kind person, and not the colour of your skin. ✊✊✊✊✊

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Also Read: “இளையராஜா கவாஸ்கர்… ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர்… ஏன் சொல்றேன்னா?” – மிஷ்கின்

சமந்தாவின் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட் வைரலானதைத் தொடர்ந்து, அவரது கல்லூரி மார்க் ஷீட்டும் சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது சமந்தா தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் அவர் விதைகளை விதைப்பதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சமந்தா

ஜிம் வொர்க் அவுட்டைத் தாண்டி யோகாவில் ரகுல் ப்ரீத்சிங்கிற்கு அதிக ஆர்வம். அவர் சொல்லி 108 சூர்ய நமஸ்காரத்தைச் செய்திருக்கிறார், நடிகை ஹூமா குரேஷி. தவிர, ‘Its never too late’ என்ற உரையாடலைத் தொடங்க இருக்கிறார். “நம் அனைவருக்கும் கடினமான காலம் இது. எதிர்காலம் குறித்த கவலை, விரக்தி, பயம், இரவில் தூங்க முடியாமல் போவது ஆகிய உணர்ச்சிகளை எல்லாவற்றையும் நான் உணர்கிறேன். இவைப் பற்றி ‘Its never too late’ என்ற ஷோவில் உங்களோடு பேச இருக்கிறேன். குறிப்பாக இரவு நேரத்தில். ஏனென்றால் நான் ஒரு ஆந்தை” என்று சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்டதோடு அதற்கான டீசரையும் பகிர்ந்துள்ளார்.

நேற்று சமீரா தனது மேக்கப் வீடியோ நாளை பதிவிடுகிறேன் என்று கூறியிருந்தார். அதற்கேற்றவாறு அவரிடமிருந்து வெறும் வீடியோ மட்டுமல்லாமல் மேக்கப் டிப்ஸும் வந்திருக்கிறது. அதற்கு ‘Bun to Fun Make up’ எனப் பெயர் வைத்திருக்கிறார். ஆண்ட்ரியா பிரவுனி செய்யத் தேவையான பொருள்கள், செய்முறையைப் பதிவிட்டது போல மேக்கப்பிற்குத் தேவையான பொருள்கள், செய்முறை ஆகிவற்றைப் பகிர்ந்துள்ளார், சமீரா.

View this post on Instagram

For me keeping sane this lockdown is being more accepting of myself. Whether it’s my lockdown double chin or grey hair! I always say Love yourself first . Then everyone else ❤️ . I needed a change so here is a fun not complicated make up video . Timepass !! This lockdown has had me in a bun and my glasses 24/7 so I decided to spruce up for a change ! . I’ve mixed a light shimmer powder with my normal Day cream . For the Glow cream base ! Do not miss this step . It’s magic ! . . Please use whatever you got at home . I was waiting to do a video with locally sourced make up but with lockdown I haven’t managed . So here are my usual suspects . @elfcosmetics St Lucia pallete ( shimmer ) @elfcosmetics HD powder @yslbeauty touché eclat no 3 @marcjacobsbeauty pen liner @nyxcosmetics_in ultimate shadow palette @becca @chrissyteigen palette – blush @maccosmeticsindia deep dark mineralise skin finish – contour @nykaabeauty kufri Lipstick @thrivecausemetics mascara . . Again all this stuff is in case you wanted to know but do use what you have at home ! Trust me ! . And always have fun ! Don’t take yourself too seriously Stay happy Girl ! . #messymama #makeup #keepingitreal #imperfectlyperfect #beauty #momlife #nofilter #havefun #motherhood #positivevibes #nofilterneeded #makeuptutorial #easy #glammakeup #loveyourself

A post shared by Sameera Reddy (@reddysameera) on

தன்னுடைய அம்மா அப்பாவின் திருமண நாளுக்கு வாழ்த்து சொன்ன இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன், தான் சிறு வயதில் அவர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘குறும்புத்தனமான குழந்தையாக இருப்பதற்கு மன்னியுங்கள்’ என்றும் கூறியிருக்கிறார்.

இந்த லாக் டெளன் காலத்தில் மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாகவே வருகிறது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், நடிகர் பிரசன்னா. “இந்த லாக் டெளனில் #TNEB கொள்ளையடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என்று ட்வீட் தட்டியவுடன் பலர் தங்கள் வீடுகளில் எக்கச்சத்துக்கும் எகிறியிருக்கும் கரன்ட் பில் ரசீதை போட்டோ எடுத்து கமென்ட் செய்கின்றனர்.

Also Read: தலைகீழே பல காதல், பல கண்ணாடி, பல கோட்டை… ஒரே ஒரு சிவந்த வானம்! டிகோடிங் மணிரத்னம் #HBDMANIRATNAM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.