மகனை விடுவிக்க கோரி காவலர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியதில் தாய் மரணமடைந்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

கொரொனோ ஊரடங்கு நேரத்தில் சேலம் அம்மாப்பேட்டை எலுமிச்சை பழம் விற்பனை செய்ததாக வேலுமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி 70 வயதுடைய அவரின் தாய் பாலாமணி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் காவல் நிலையத்தில் இருக்கும் அனைத்து காவலர்களின் கால்களில் விழுந்து வணங்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

image

இதன் பின்னரும் அவருடைய மகனை விடுவிக்காத நிலையில் மயக்கமடைந்த பாலாமணி மரணமடைந்தார். இது தொடர்பாக காவல்துறையின் அலட்சியத்தால் தன் தாயின் மரணம் தொடர்பாக வேலுமணி பேசி வெளியிட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான செய்தியை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர், சேலம் மாநகர காவல் ஆணையர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.