மரணப் படுக்கையில் ரிஷி கபூர், இறுதியாகக் கேட்ட பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. 
 
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67. 1970-ம் ஆண்டில் ‘மேரா நாம் ஜோக்கர், படத்தில் அறிமுகமான இவர்,  தேசிய விருதும் வாங்கியுள்ளார். 1973-ல் வெளியான ‘ பாபி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த ரிஷி கபூர்,  2018-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
 
மேலும் ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்தார். சிகிச்சைக்குப் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கிலிருந்து இந்தியா திரும்பினார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மறைந்தார். அவரது மறைவுக்கு இந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
 
image
 
இந்நிலையில், ரிஷி கபூர், மருத்துவமனையில் கடைசியாகக் கேட்ட பாடல் சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பல்லவ் பலிவால் என்பவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் மருத்துவமனையில் படமாக்கப்பட்ட வீடியோ இது என்றும் மருத்துவமனை ஊழியரின் பாடலைக் கேட்டு ஆசிர்வதித்த போது எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே படமாக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து பகிரப்பட்டு வருகிறது. 
 
image
 
மேலும் தனது சிகிச்சைக்காக ரிஷி கபூர், மருத்துவமனைக்கு வந்தபோது இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில் ரிஷி கபூரின் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று ஒரு இளைஞர் பாடுகிறார். அதைக் கேட்ட அவர், மிகச் சிறப்பாக உள்ளது என்று ஆசீர்வதிக்கிறார். இந்த வீடியோவை அவரது மறைவையொட்டி அந்த ஊழியர் பகிர்ந்து கொண்டுள்ளார். அது இப்போது வைலராக மாறி உள்ளது.
 
இதனிடையே ரிஷி கபூரின் இறுதிச் சடங்கிற்கான வேலைகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.