`இந்த லாக் டெளன் முடியட்டுமா; ஏம்மா இப்படி பண்ற….’ காலையிலே ஒரே சத்தம் பக்கத்து வீட்டில். என் வீட்டுக் கடிகாரம் மணி 8 காட்டியது. சரி வெளிய என்ன சத்தம் எட்டிப்பார்த்தா 5-வது படிக்கிற பக்கத்துவீட்டுப் பையனுக்கு அவங்க அம்மா முடி வெட்டிக்கிட்டு இருந்தாங்க. பக்கத்துல எங்க அம்மா ஒரு லுக்குவிட திருப்பதி ஏழுமலையான புண்ணியத்துல நம்ம தலை தப்பிச்சதுடான்னு வீட்டுக்குல நுழைஞ்சேன். சரி நமக்கு மட்டும்தான் இந்த நிலைமையா லாக் டெளன் எல்லாத்துக்கும் தானே இந்தக் கஷ்டம் இருக்கும் என நினைத்துக்கொண்டே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணுனா, லாக் டெளன் காலத்து திடீர் வாட்ஸ்அப் குரூப்பில் மெசேஜ்கள் குவிந்திருந்தன.

வாட்ஸ் அப்

இதுதான் மீம்ஸ்கள் சூழ் உலகமாச்சே, டிஸைன் டிஸைனா மீம்ஸ்கள் கொட்டிக்கிடந்தன. இந்த லாக் டெளன் முடிஞ்சதும் ஹோட்டல்களுக்குப் போவாங்களா, இல்ல சலூன்களுக்குப் போவாங்களான்னு ஒரு குரூப்ல பட்டிமன்றம் நடத்துக்கிட்டு இருந்தது. அங்கிள்ஸ் மட்டுமே இருந்த ஃபேமிலி குரூப்அது. சரி நம்ம சேவையைச் சிறப்பா செஞ்சிடுவோம்னு கொஞ்சம் அவங்க மனைவிகளை குரூப்ல சேர்த்துவிட, பட்டிமன்றம் தீர்ப்பே இல்லாம முடிஞ்சு போச்சு. குரூப்ல சத்தம் இல்ல.

சரி நமக்கு மட்டும்தான் இந்தப் பிரச்னையா பிரபலங்கள் எல்லாம் என்னா பண்ணுவாங்க இன்ஸ்டாகிராமைத் திறந்ததும் தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் ஸ்டேட்டஸ்கள் கண்ணில்பட்டன. லாக் டெளன் காலத்தில் தாடி மீசையெல்லாம நன்கு வளர்ந்திருக்க, சரின்னு செல்ப் சேவிங்ல இறங்கியிருக்கார் சண்முகப்பாண்டியன். ஹேர்டிசைனர் போன்று விதவிதமான கெட்டப்களை ட்ரை பண்ணியிருக்கிறார். இதில் சார்லி சாப்ளின் மீசையையும் விட்டுவைக்கவில்லை அவர். கடைசியா க்ளின் ஷேவ் புகைப்படத்தைப் பதிவிட்டு, `ஃபைனலி இட்ஸ் டன்’ அப்படின்னு முடிச்சுட்டார்.

சண்முகப்பாண்டியன்

சண்முகப்பாண்டியன் வரைக்கும் வந்துட்டோம் அப்படியே நம்ம கேப்டன் பத்தி எதாவது போஸ்ட் இருக்கான்னு அவரு பேஜ்ல தேடுனா ஒண்ணும் இல்ல. இன்ஸ்டால இல்ல, ஆனா ஃபேஸ்புக்கில் இருந்தது. விஜயகாந்த் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், `கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்…!’ என்ற தலைப்பில் இரண்டு வீடியோ இருந்தன. விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா, சிகை அலங்காரம் செய்து விடும் காட்சிகள். அந்த வீடியோவில் பேசியுள்ள பிரேமலதா, “நான் கேப்டனுக்கு அடிக்கடி சிகை அலங்காரம் செய்துவிடுவேன். கொரோனா லாக் டெளன் டைம் இது. நாம் சமூகவிலகலைக் கடைப்பிடிக்கிறோம் என்பதால் நானே செய்கிறேன்’’ என்றார். `எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’.. ஹலோ இது என் மைண்ட் வாய்ஸ் இல்லங்க அந்த வீடியோ பேக்ரவுண்ட்-ல இந்தப் பாட்டுதான் பாடுது.

கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்…!

#CORONA #COVID19 #lockdown #StayHome #StaySafe

Posted by Vijayakant on Sunday, April 19, 2020

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.