தமிழகத்தில் கொரோனா மற்றும் வெயில் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால் மாஸ்க் அணிந்து குடையுடன் பயணம் செய்யும் முதியவர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.
கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்.
வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வெள்ளரிக்காய், தர்பூசணி பழம் விற்கும் வண்டி.
சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்பவர்.
தண்ணீர் பிடிக்க செல்லும் குடும்பம்.
சென்னை நேப்பியர் பாலம்
மதுரையில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு.
மதுரை மாவட்ட ஆட்சியரும், ஆணையரும் செவிலியர்களிடம் கொரானா குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி கிராமப் பகுதியில் சாமந்தி பூக்களுக்கு தகுந்த விலை இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யவில்லை.
புதுச்சேரி துறைமுகப் பகுதிகளில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுக்கும் தன்னார்வலர்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி திருவான்மியூர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ள கொரானா பொம்மை.
செயல்பாடாமல் இருக்கும் கிருமிநாசினி சுரங்கம் – சென்னை.
144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளிடம் வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்.
கொரோனா வைரஸ் தோற்று பரவலை தடுக்கவும், மக்களை வீட்டில் இருக்க வலியுறுத்தியும் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையம் சார்பில் வினோதமான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் மெல்லிசை மேடை கலைஞர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட இருக்கும் மளிகை பொருட்கள். இடம் : திண்டுக்கல்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு எம்.பி நிதியில் 1 லட்சம் மாஸ்க் வழங்கினார்.
காவல்துறை பாதுகாப்போடு டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளை குடோனுக்கு மாற்றம் செய்யும் மதுரை ஊழியர்கள்.
வேலூரில் விலைப்பட்டியல் உடன் உழவர்சந்தை.
தமிழக, ஆந்திரா எல்லையில் கொரோனா பரிசோதனை.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் இருப்பினும் வயலில் இறங்கி களை எடுக்கும் பெண்கள்.
வள்ளுவர் கோட்டம் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் சிறுவன்.
எப்பொழுதும் புனித வெள்ளிக்கு பரபரப்பாக காணப்படும் தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டது
சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக்கோரி இராமநாதபுரத்தில் ஓவியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியம்.
ராமேஸ்வரத்தில் உணவின்றித் தெருவில் உலவும் நாய்களுக்கு உணவு வழங்கும் போக்குவரத்து காவலர்.
முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக 4 குழந்தைகள் தங்களது உண்டியல் பணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.
144 தடை அமலில் உள்ள நிலையில் மளிகை பொருள் விலை உயர்வால் கூட்டுறவு அங்காடியில் நீண்ட வரிசையில் நின்று மளிகை பொருள் வாங்கும் பொதுமக்கள். ஊட்டி
நாகர்கோவிலில் பொதுமக்கள் நலன் கருதி கன்கார்டியா பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ள இரண்டாவது தற்காலிக காய்கறி சந்தை.
துப்புரவு பணியில் தூய்மை பணியாளர்கள்.
அத்தியாவசிய தேவையான சிலிண்டரை மக்களுக்கு விநியோகிக்க செல்லும் ஊழியர்.
உணவு பாதுகாப்புத்துறை எஸ்.பி திடீர் ஆய்வு.
உழவிற்கு ஓய்வில்லை
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க குன்றக்குடி கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியைத் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாததால் வீதிகளில் உலா வரும் வாத்துகள்.
கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பழைய மாட்டு வண்டி பயணத்திற்கு மாறிய தமிழர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.