சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர், புருஷோத்தமன் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன் (72). இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ஊரடங்கு உத்தரவு காரணமாக நரசிம்மன், வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் இருந்துவந்தார். இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு நரசிம்மன், வீட்டில் சிகரெட்டை பற்றவைத்தார். அதைப்பார்த்த அவரின் மனைவி, சிகரெட் பிடிப்பதால், உங்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தினருக்கும் பாதிப்பு என்று கூறினார்.

Also Read: ரயில்வே ட்ராக்கில் கிடந்த உடல்.. கொரோனா நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மன் அமைச்சர்!

சிகரெட்

நரசிம்மன், சிகரெட் பிடிக்கும்போது அவரின் மனைவி கண்டிப்பது வழக்கம். ஆனால், அன்றைய தினம் சிகரெட் பிரச்னை வீட்டில் விஸ்வரூபம் எடுத்தது. மனைவியின் பேச்சுக்கு நரசிம்மன், எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.

ஆனால், நரசிம்மனுக்குத் தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றார். அங்கு கழிவறையைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட் இருந்ததை நரசிம்மன் பார்த்தார். பின்னர், அதைக் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அப்போது கழிவறைக்கு வந்த நரசிம்மனின் மனைவி, அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் நரசிம்மனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

Also Read: `கொரோனா உயிரிழப்பைத் தடுக்கத் தவறிய சி.எம்.சி மருத்துவமனை?’ – எச்சரித்த வேலூர் கலெக்டர்

அங்கு சிகிச்சைப் பலனின்றி நரசிம்மன் இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார், நரசிம்மனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.