கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பார்சல் சர்வீஸ் தடைசெய்யப்பட்டிருக்கிறது. தனியார் மருந்தகங்களுக்கு, மருந்து கம்பெனிகளில் இருந்து மருந்துகள் சப்ளை செய்யப்படுவது முழுவதும் தடைபட்டிருப்பதாகவும் இதனால், விரைவில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் என மருந்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Also Read: முள், கட்டை, கற்களால் அடைக்கப்பட்டுள்ள தெருக்கள்! – திணறும் தேனி சுகாதாரத்துறையினர்
பெரியகுளத்தில் தனியார் மருந்தகம் வைத்துள்ள சேட் கூறும்போது, “எனக்கு முக்கியமான மருந்துகள் சப்ளை இல்லை. மருந்து கம்பெனிகளிடம் ஆர்டர் கொடுத்தால், ஆர்டரை வாங்கிக்கொண்டு, மருந்துகளை நீங்களே வந்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறுகின்றனர். என்னைப் போன்ற சின்ன மருந்துக்கடை வைத்திருப்பவர்கள், செலவு செய்து வண்டி பிடித்து மருந்து கொண்டு வந்தால் எங்களுக்கு லாபமே இருக்காது.
ஒன்று இரண்டு சதவிகித லாபத்துக்குத்தான் இந்தக் கடை வைத்துள்ளோம். கிடைக்கும் லாபத்துக்கு மேல் செலவு செய்தால்தான் வண்டி பிடித்து மருந்து கொண்டுவர முடியும் என்ற நிலை இப்போது இருக்கிறது. முன்னரெல்லாம் பார்சல் சர்வீஸ் மூலம் மருந்துகள் வரும். இப்போது பார்சல் சர்வீஸ் இல்லாததால், மருந்துகள் கொண்டுவர தனியாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரிய மருந்துக்கடைகளைத் தவிர கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் இயங்கும் மருந்துகடைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Also Read: `ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்
இதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உடையோர், ரத்த அழுத்தம் உள்ளோர் ஆகியோர்களுக்கு எங்களால் மருந்து கொடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் விரைவில் மருந்துகள் மொத்தமும் தீர்ந்துவிடும்.
இப்போதே சில மருந்துக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. மாவட்ட நிர்வாகம் உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து மருந்துகள் வந்து சேர வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்து தட்டுப்பாடு ஏற்படாது” என்றார்.

Also Read: `தேனி நகரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று!’ – ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்ட தேனி போலீஸார்
இது தொடர்பாக, தேனி மாவட்ட அத்யாவசியப் பொருள்கள் விநியோகப் பிரிவு அலுவலரிடம் பேசினோம். “மருந்துகளைக் கொண்டுவர அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. வாகனத்தில் மருந்து அவசரம் என்று எழுதினாலே போதும். மேலும், அவர்கள் கூறுவதுபோல, மருந்துகளை எடுத்து வர வாகன ஏற்பாடு செய்வது குறித்து அரசுதான் முடிவு எடுக்க முடியும்” என்றார்.