இயக்குநர் சேரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் ‘தவமாய் தவமிருந்து’ இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
 
1997 ஆம் ஆண்டில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சேரன்.  இதில் பார்த்திபன் மற்றும் மீனா ஆகியோர் நடித்தனர். கதை அளவிலும் நகைச்சுவை அளவிலும் இந்தப் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.  
 
Sanga Thamizhan: Producer clears financial issues, Vijay ...
 
அதன் பின்னர் அவர் ‘பொற்காலம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’ மற்றும் ‘தவமாய் தவமிருந்து’ வெற்றிப் படங்களை இயக்கினார்.  இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ்த் திரை உலகில் வலம் வந்தார் சேரன்.  இவர் நடிப்பில் வெளியான ‘ராஜாவுக்கு செக்’ படம் சரியாக வெற்றிபெறவில்லை.  இவர் இயக்க உள்ள திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்திருப்பதாக சில காலமாகவே தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில்  இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ள திரைப்படம் குறித்த சில விவரங்களைத் தெரிவித்துள்ளார். 
 
Thavamai Thavamirundhu - Alchetron, The Free Social Encyclopedia
 
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ள படத்துக்காக திரைக்கதை இருக்கும். ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது..  அண்ணன்களும்  தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து  பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்” எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அவர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.  இவர்  ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்தைக் குறிப்பிட்டுள்ளதால் ஒருவேளை இந்தப் படம் இதன் இரண்டாம் பாகம் போல் இருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
 
மேலும் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக இருக்கும் விஜய் சேதுபதியுடன் இவர் இணைவதால் அந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.