தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அதிகாரிகளின் அலட்சியம்?: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்
தமிழகத்தில் கொரோனாவுக்கு மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்த 50 வயது முதியவர் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக துபாயிலிருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் அனைவருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM