தஞ்சையில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களை அடையாளப்படுத்த அரசு சார்பில் அவர்களது கையில் வைக்கப்பட்ட சீல் புண் ஆனதாக புகார் எழுந்துள்ளது. 

image

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரமானது மதியம் 1 மணி வரையாக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – நடிகை மீனா

image

இனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்… எப்படி ?

ஆகவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளிலில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு அரசு சார்பில் கையில் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை திருவையாறு அருகே நடுக்கடை பகுதியில் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது கையில் சீல் வைக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த சீல் வைக்கப்பட்ட பகுதியில் அரிப்பு ஏற்பட்டு அது புண்ணாக மாறியுள்ளது. கையில் சீல் வைக்கும் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் சீல் வைத்த பிறகு அதனை சுத்தம் செய்யாமல் அப்படியே மற்றவர்களுக்கும் சீல் வைப்பதால் இதுபோன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.