ஊரடங்கு காலத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த தவறுவதில்லை. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் பதிவிட்ட ட்விட்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், அனைவரும் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் வீரர்களும், வீட்டு வேலைகள் செய்வது, செல்லப் பிராணிகளை வளர்ப்பது உள்ளிட்ட புது முயற்சிகளில் இறங்கி அதனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கோலிக்கு, அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி திருத்தம் செய்யும் வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றார்கள். தொடக்க வீரர் ஷிகர் தவான், வீட்டு வேலை செய்வது தொடர்பாக வெளியிட்ட வீடியோ, ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தோட்டக்காரராக மாறியுள்ளார். வீட்டின் மாடியில் செடி வளர்ப்பை தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, உடற்பயிற்சி, குதிரை ஏற்றம் உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
புஜாரா, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக காலத்தை கடத்தி வரும் புகைப்படங்களை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷமி, செல்லப் பிராணியுடன் விளையாடி உற்சாகம் பெறுவதாக பதிவிட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சஹால், தனது குடும்பத்தினருடன் டிக் டாக் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். களத்திலும், களத்திற்கு வெளியேயும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்… எப்படி ?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM