‘மங்காத்தா’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் அஜித் அணிந்திருந்த டாலரின் ரகசியம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர்.

சமூக ஊடகமான ட்விட்டர் முழுக்க இன்றைக்கு ‘மங்காத்தா’ படத்தைப் பற்றியே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் படத்திற்குள் ஒளிந்திருந்த ரகசியங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். பொதுவாக இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ஒவ்வொரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சிறப்பாக செயல்படுவார். இவர் அஜித்துடன் இணைந்து ‘மங்காத்தா’வை இயக்கிய போது அஜித் ரசிகர்கள் அதனைக் கண்கூடாக உணர்ந்தனர். அந்தப் படத்தின் க்ளைமேக் காட்சிகளைப் பார்த்து உற்சாகமடைந்தனர்.

Venkat Prabhu and Ajith to team up for 'Mankatha 2'?

ப்ளாக் பாஸ்டர் வெற்றியைச் சம்பாதித்த இந்த கேங்க்ஸ்டர் வகை படத்தில் அஜித், யதார்த்தமாக நடித்திருந்தார். மேலும் அவர் தனது இமேஜை பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளாமல் அந்த நெகட்டிவ் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். ஆகவே அந்தப் படம் பெரும் வசூலை ஈட்டியது.

இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்த இயக்குநர் ஹெச். வினோத், தனது ‘வலிமை’ படம் அடுத்த ‘மங்காத்தா’ எனக் கூறியிருந்தார். அதனை வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலைப் பகிர்ந்தார் வெங்கட் பிரபு. அப்படியே அஜித் ரசிகர்கள் அந்தச் செய்தியைத் தீயாகப் பரவ வைத்தனர். இதனிடையே ‘மங்காத்தா’வில் அஜித் அணிந்திருந்த செயின் பற்றிய ரகசியத்தை ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Mankatha Theme Music-m Ringtone Download Free | Instrumental | MP3 ...

பணம் மற்றும் டாலர் ஆகிய இரண்டும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிப்பதால், வெங்கட் பிரபு ஒரு டாலர் சங்கிலியை அஜித் கதாபாத்திரத்திற்கு வழங்க விரும்பினார். அஜித் ஒரு காவலராக இந்தப் படத்தில் நடிப்பதால், கைவிலங்கு வடிவத்தில் ஒரு டாலரை தேர்ந்தெடுத்தார் என வாசுகி விளக்கியுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.