பாதியிலேயே நின்றுபோன தனுஷின் வெளிவராத திரைப்படமான ‘திருடன் போலீஸ்’  படத்தின் போஸ்டர் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது!
 
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ஜகமே தந்திரம்’ . இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இது ஒரு  கேங்க்ஸ்டர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இதன் டீஸர் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்  நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப் போய் உள்ளது. ஆகவே மீண்டும் இயல்பு நிலை திரும்பும்  வரை  திரை ரசிகர்கள் காத்துள்ளனர்.  
 
Image
 
இந்நிலையில்,  2006 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் உருவான  ‘திருடன் போலீஸ்’ திரைப்படத்தின் பழைய போஸ்டர் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. பாதியிலேயே நின்றுபோன இப்படத்தின் போஸ்டரை அவரது ரசிகர்கள் அதிகமாக ட்விட்டரில் பகிர்ந்து  வருகின்றனர்.
 
தனுஷின் அண்ணன்  இயக்குநர் செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ படத்திற்குப் பிறகு, அரவிந்த் கிருஷ்ணா இயக்கிய இந்தத் ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் வெளியாக இருந்தது.  ஆனால் அந்தப் படம் இதுவரை திரைக்கு வரவில்லை. ஏன் நிறுத்தப்பட்டது?  ஏன் தாமதமானது என்பதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருந்தும்  இந்த போஸ்டர் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போது அவரது ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தாகி இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் திடீரென  ட்விட்டரில் கசிந்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தனுஷின் பல வெற்றிப் படங்களுக்கு யுவன், இசையமைத்து வந்தார். 
 
அட்ராங்கி ரே: தனுஷின் மூன்றாவது ...
 
இதனிடையே, இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும் தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படப்பிடிப்பில் தொடர்ந்து அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆனந்த் எல் ராய் இதனை இயக்கி வருகிறார்.  அக்ஷய்குமார் படத்தினை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.